அம்பேத்கர் வளர்ச்சி சங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினரை குறிப்பிட்ட காலத்துக்குள் நியமிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் தற்போது ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், ‘தேசிய பட்டியலினத்தவர் ஆணைய காலிப் பணியிடத்தை விரைந்து நிரப்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More