எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில்,மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எம்.டி.எஸ். அதாவது Multi Tasking Staff Exam மற்றும் சிஹெச்எஸ்எல் என்கின்ற Combined Higher Secondary Level Exam ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More