ஏக்நாத் ஷிண்டே அணியினரை துரோகிகள் என்று உத்தவ் தாக்கரே அணியினர்; வசைப்பாடும் நேரத்தில், முதல்- அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் தானே டெம்பி நாக்கா மண்டலில் தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டே மேற்பார்வையில் இந்த மண்டலில் நவராத்திரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அரசியலில் திடீர் பரபரப்பாக முதல்- அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நடத்தி வரும் நவராத்திரி விழாவிற்கு வந்த உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே அங்குள்ள தேவி சிலையை தரிசனம் செய்தார். எதிரணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தொடர்புடைய நவராத்திரி மண்டலுக்கு உத்தவ்தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரேவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More