காமெடி நடிகர் சந்தனம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அது வெற்றி, தோல்வி என்று இல்லாமால் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே செல்கிறார். அதற்கு அண்மையில் வெளியான குலு குலு படமே சிறந்த சான்று.
தற்போது சந்தனம் “ஏஜென்ட் கண்ணாயிரம்” என்கிற படத்தில் லீட் ரோலில் துப்பறியும் ஏஜெண்ட் ஆக நடித்துள்ளார். இவரோடு ரியா சுமன், புகழ், முனிஸ் காந்த், ரெடின் ஆகியோர் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். வரும் 25 அன்று உலகமெங்கும் இப்படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று இப்படத்தின். டிரெய்லர் வெளியானது. இது தற்போது வைரல் ஆகி உள்ளது.
டிரெய்லர் லிங்க்: https://youtu.be/2HFRLk2fI8c