Mnadu News

ஏஜென்ட் கண்ணாயிரம் தீம் இசை வெளியீடு!

காமெடியன் சந்தானம் ஹீரோ ஆகி பல படங்களில் நடித்து விட்டார். ஓவ்வொரு படத்திலும் புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி ரத்னா இயக்கத்தில் அவர் நடித்த படம் “குலு குலு”. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைவரையும் ஈர்க்க வைத்தது. வணிக ரீதியாக இப்படம் பெரும் தோல்வியை தழுவியது என்றாலும், புதிய முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தன.

அப்படி ஒரு முயற்சி தான் “ஏஜென்ட் கண்ணாயிரம்” இதில் சந்தானம் துப்பறியும் ஏஜெண்ட் ஆக நடித்துள்ளார். இவரோடு ரியா சுமன், புகழ், முனிஸ் காந்த், ரெடின் ஆகியோர் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது என படக்குழு அறிவித்த நிலையில், தற்போது படத்தின் தீம் இசை வெளியாகி உள்ளது.

லிங்க் : https://youtu.be/kmkxHDWcmvE

Share this post with your friends