Mnadu News

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

தனியார் சேனல் இல் ஸ்பூப் ஷோக்கள் மூலம் அறிமுகமானவர் சந்தானம். பின்பு சிம்பு இவரை “மன்மதன்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தனக்கென தனி அடையாளமாக உருவாகி பல முன்னணி நடிகர்கள் உடன் காமெடியில் கலக்கி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் சந்தானம்.

அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தேர்வு செய்யும் படங்கள் ஹிட் ஃப்ளாப் என என்ன ஆனாலும் சரி தொடர்ந்து படங்கள் கொடுத்து வருகிறார்.

அப்படி ஒரு புதிய முயற்சி தான் ” ஏஜென்ட் கண்ணாயிரம்” ரியா சுமன், புகழ், முனிஸ் காந்த், ரெடின் ஆகியோர் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

வீடியோ லிங்க் : https://youtu.be/vq5OXHXd9Xs

Share this post with your friends