224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10-ஆம்; தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே, ஏப்ரல் 29ஆம் தேதி கர்நாடகா வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் நடை பெறும் 4 கிலோ மீட்டர் தூர சாலை பேரணியில் கலந்து கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More