ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் அதனையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More