வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி இரண்டு தினங்களுக்கு முன் வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். கன்னூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை காண முடியாத சோகத்தில் சிறுவன் ஒருவர் அழுதுள்ளார்.
இதனால் மகனின் சோகத்தைக் காண இயலாத தந்தை அழுகும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தச் செய்தி ராகுல் காந்தியின் காதுக்குச் சென்றதால் ராகுல் காந்தி அந்தச் சிறுவனின் எண்ணைக் கண்டுபிடித்து அலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த சிறுவன் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவையும் சிறுவனின் தந்தை சமூக வலைதளங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டார்.