Mnadu News

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி மே 21-ல் தொடக்கம்.

நிகழாண்டில் நடத்தப்பட உள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.அத்துடன்,அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாள்களில் இன்னிசை நிகழ்ச்சிகள், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. ளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this post with your friends