உலக நாடுகளை எப்போதுமே பரபரப்பாக வைப்பதில் வட கொரியா கைதேர்ந்த நாடு. வடகொரியா இந்த ஆண்டு பெரிய அளவில் ஏவுகணை சோதனையை தீவிரம் ஆகியுள்ளது. இந்நிலையில், இதுவரை சுமார் 30 இக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
வடகொரியா இதை எதிர்க்கும் வகையில்
குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை கடந்த 25 ஆம் தேதி பரிசோதித்தது. இதை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று தென்கொரியாவுக்கு செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.