Mnadu News

ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுள் தரப்போகும் அம்சம்! எப்போது ரிலீஸ் தெரியுமா ?

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எல்லா காலங்களிலும் தவிர்க்க இயலாத ஒன்று. ஒவ்வொரு மாற்றமும் மனிதர்களை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராக்கும் சாவி எனலாம். கடந்த பல மாதங்களாக இந்த செயற்கை நுண்ணறிவு  என்கிற சொல் உலகமெங்கும் சுழன்று வருகிறது. என்ன தான் செயற்கை நுண்ணறிவு  மனிதர்களை விஞ்சும் காரியங்களை செய்து வந்தாலும், இதற்கு கொஞ்சமும் அஞ்சமால் கூகுள் நிறுவனமும் பல புதிய அப்டேட்ஸ் ஐ இறக்கி வருகிறது.

கூகுள் இன்று எல்லோரது வாழ்விலும் ஒன்றர கலந்து விட்டது என்று சொல்ல வேண்டும். எதை வேண்டுமானாலும் கூகுள் செய்து தெரிந்து கொள்ளலாம், பார்த்து கொள்ளலாம், கூகுள் இருக்க பயம் ஏன் என சொல்லும் அளவுக்கு கூகுளின் ரீச் மற்றும் பயன்பாடு சற்றும் குறையவே இல்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று கூகுள் போட்டோஸ் அம்சம். இதில் நமக்கு தேவையான அனைத்தையும் புகைபடங்களையும் ஒரு பேக் அப் (BACKUP) போன்று ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

தற்போது இதில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது கூகுள். அதாவது கூகுள் போட்டோஸ் ஆப்-ல் “Memories” என்ற ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது அதைப் பயன்படுத்தி தானாகவே உருவாக்கப்பட்ட போட்டோ, வீடியோவை நமக்கு காண்பிக்கிறது. மேலும் ஏ.ஐ மூலம் இந்த “Memories” க்கு ஒரு பெயரும் வைக்கலாம்.

“Memories” க்கு சென்று “Help me title” என்ற ஆப்ஷன் கிளிக் செய்தால் அந்த போட்டோ, வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் ஏ.ஐ மூலம் தானாகவே ஒரு அருமையான பெயரும் கொடுக்கப்படுகிறது. மேலும் பெயர் வைக்க ஏ.ஐக்கு நீங்களாகவே ஐடியா கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் ஐடியாவை கொண்டு ஏ.ஐ உங்களுக்கு டைட்டில் பரிந்துரைக்கும்.

தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

Share this post with your friends