Mnadu News

ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி கடந்த 2016-ஆம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2018 ஆண்டு மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது. மனோகரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி அமைப்பின் வாரியம் சாரா 2-வது தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வானார். கடந்த 2012 ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராகவும் கடந்த 2015ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றினார்.
இந்நிலையில் ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வாகியுள்ளார். அடுத்த இரு வருடங்களுக்கு இப்பதவியில் அவர் நீடிப்பார். ஜிம்பாப்வேயின் முக்லானி போட்டியிலிருந்து விலகியதால் கிரேக் பார்கிளே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி குழுவில் உள்ள 17 வாக்குகளில் 12 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெறுபவராக இருந்த காரணத்தால் போட்டியின்றி அவர் தேர்வாகியுள்ளார்.

Share this post with your friends