Mnadu News

ஐந்து நிமிடத்தில் மேக் அப்

அலுவலகம்  சென்று  வேலை பார்க்கும் பெண்களுக்கும், கல்லூரி பள்ளிகளில் படிக்கும்   மாணவிகளுக்கும்  தான் அவசரம்  என்பதில்லை. சாதாரண குடும்ப  தலைவிகளுக்கு  கூட அவசர   அவசரமாக  புறப்பட்டு  செல்ல வேண்டிய  சூழ்நிலை  ஏற்படுகிறது .

அந்த அவசரத்தில்  அழகான’ மேக் -அப்  ‘ போட்டுக் கொள்வதை பெண்கள்   அறிந்து  வைத்திருக்க வேண்டும். 5 நிமிடத்தில்  அழகாக ‘ மேக் -அப்  ‘  செய்ய  இதனைப் பின்பற்றுங்கள்   .

முதலில்  முகத்தை சோப்பிட்டு கழுவி  துடையுங்கள். சரும பாதுகாப்புக்காக   ‘லிக்யுட் ‘ பவுன்டேசன்  நாலு அல்லது  ஐந்து துளிகள் எடுத்து  முகத்தில்  தடவி கொள்ளுங்கள். முகத்திற்கு நிறத்திற்கேற்ப  பொருத்தமான  பௌடெரை  பூசுங்கள் .

அடர்ந்த புருவம் இருந்தால்  பிரஷ் செய்தால் மட்டும் போதும் .இல்லாவிட்டால்  ஐ -ப்ரோ  பென்சில்  மூலம் லேசாக வரையுங்கள்  . உடுத்தும் உடைகளுக்கு  ஏற்ப   இளம்  நிறத்தில்  ஐ -ஷேடோ  போடலாம் .

கண் மை பயன்படுத்தினால்   அதிக நேரம் ஆகும். அதனால் ஐ – பென்சில் சிறந்தது. கருப்பு, பிரவுன், நீல நிறத்தில்   பென்சில்கள்  கிடைக்கின்றன .

உடைகளில்  நிறம், ஐ -ஷேடோ ஆகியவைகளுக்கு  பொருத்தமான லிப்ஸ்டிக்  பயன்படுத்துங்கள். சாந்து, குங்குமம், ஸ்டிக்கர்  போட்டு  அல்லது ஐ -லைனர்  கொண்டு  பொட்டு வைத்து  கொள்ளவும் .

அப்புறம் என்ன ? கண்ணாடி  முன்பு நில்லுங்கள்  ! அழகாக இருப்பீர்கள். வேறு என்ன ?தேவைப்பட்டால்  ‘சென்ட்’ பூசி கொண்டு   கிளம்ப வேண்டியது தான்.

 

 

 

 

 

 

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More