Mnadu News

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்: சினிமா எடுக்கும் அளவிற்கு கேமரா தரம்

ஐபோன் 14 ப்ளஸ் விலை இந்தியாவில் 89,900 ரூபாய் விலையில் தொடங்குகிறது. ஐபோன் 14இன் விலை 79,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஐபோன் 14 கேமரா தொழில்நுட்பம் DSLRருக்கு இணையாக இருக்கிறது.

ஐபோன் 14: டிஸ்பிலே

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியத்திலேயே மிக பெரிய திரையை கொண்ட போன் ஐபோன் 14 தான். ஐபோன் 14இல் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 14 முந்தய மாடல் போனை விட புதிய சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிலே கொண்டுள்ளது மேலும் சிறப்பாகும். இந்த டிஸ்ப்ளேயில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் (Refreshing rate) மற்றும் 2000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவு உள்ளது. இதில் உள்ள HDR அம்சமானது பரந்த வண்ண வரம்பு ஆதரவை வழங்குகிறது.

ஐபோன் 14: சிப்

ஐபோன் மாடலில் புதிய ரக சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன்களில் அதிவேக சிப் ஐபோன் 14இல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ 4nm-அடிப்படையிலான A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் 13-ஐ காட்டிலும் இது அதிவேக சிப் கொண்டுஉள்ளது.  கேமிங் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனை இந்த சிப்செட் மேம்படுத்தி வழங்குகிறது. ஐபோன் 14 சீரிஸ்யில்  மினி மாடல் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. விபத்து கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் ஐபோன் 14 கொண்டிருக்கிறது.

ஐபோன் 14: கேமரா

ஐபோன் என்றாலே பெயர்போனது கேமரா தான். ஐபோன் 14 இல் கேமரா அபார வளர்ச்சியை எட்டி உள்ளது. ஐபோன் 14இல் 48MP முதன்மை குவாட்-பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை உள்ளது. போர்ட்ரெய்ட், நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஸ்டெபிலைசேஷன் டூயல் ஓஐஎஸ், ஸ்மார்ட் எச்டிஆர், மேக்ரோ மோட், ஆப்பிள் ப்ரோரா உள்ளிட்ட பல்வேறு கேமரா ஆதரவுகள் இதில் இருக்கிறது. குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் அடைந்துள்ளது. போர்ட்ரெய்ட், நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஸ்டெபிலைசேஷன் டூயல் ஓஐஎஸ், ஸ்மார்ட் எச்டிஆர், மேக்ரோ மோட், ஆப்பிள் ப்ரோரா உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இருக்கிறது.

ஐபோன் 14: நிறங்கள் மற்றும் விலை

ஆப்பிள் ஐபோன் 14 ஐந்து நிறங்களில் சந்தைக்கு வந்துள்ளது. Midnight, Starlight, PRODUCT(RED), Blue மற்றும் Purple நிறங்களில் கிடைக்கின்றது. ஐபோன் 14 போன்கள் 79,900இல் இருந்து தொடங்குகிறது இதில் 128GB, 256GB, 512GB என மூன்று சேமிப்பு திறனுடன் வெளியாகி இருக்கிறது. ஐபோன் 4 பிளஸ் 89,900இல் இருந்து தொடங்குகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More