Mnadu News

ஐ டி ஆர் தாக்கல் செய்யும் தேதி நீடிப்பு! முழு விபரம் உள்ளே!

வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

யூனியன் பட்ஜெட் 2023-24 தரவின்படி, நடப்பு நிதியாண்டில் 33.61 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வரவுகளை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதில், பட்ஜெட் ஆவணங்களின்படி, கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரி வசூலிப்பதை விட, 10.5 சதவீதம் அதிகமாக, 18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

FY23 க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.9.56 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி மற்றும் மறைமுக வரிகள் இரண்டையும் எடுத்துக் கொண்டால், கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட ரூ.30.43 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 2023-24ல் மொத்த வரி வசூல் 10.45 சதவீதம் அதிகரித்து ரூ.33.61 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் அதிகம் வரும் என எதிர்பார்ப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

Share this post with your friends