இந்த சடங்கு குறித்து பஹாநகர் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூறுகையில்,ரயில் விபத்து நேரிட்டபோது, நூற்றுக்கணக்கானோரை நாங்கள் மீட்டோம். ஏராளமானோரின் உடல்களையும் மீட்டுக் கொடுத்தோம்.அவர்கள் அனைவரையும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதுகிறோம். எங்கள் குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்தால்; இந்தச் சடங்கை செய்வது வழக்கம். அதுபோலவே எங்கள் ஊரில் உயிரிழந்தவர்களையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து இந்த 10வது நாள் சடங்கை செய்திருக்கிறோம் என்கிறார்கள். இது மட்டுமல்லாமல், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையன்று, கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்கள் குணம்பெற பிரார்த்தனை செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More