குடிகுடியை கெடுக்கும் என்பார்கள், ஆனால் ஒயின் குடித்தால் பல நன்மைகளை தரும். ஒயின் ஒரு போதைதரும் பானம் இல்லை உடலுக்கு நன்மைதரக்கூடிய ஒருபானம். புற்றுநோய், இதய நோய்கள், மனநலம் மற்றும் உடல் நலத்திற்கு நன்மை தரும் ஒயின். சரியான அளவில் குடித்தால் நீண்ட ஆயுள் கூட பெறலாம்.
குடிப்பவர்களிடம் என் குடிக்கிறீர்கள் என்று கேட்டால், எல்லாம் ஒரு ரிலாக்சேஷனுக்காக என்பார்கள். ஹார்வார்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி படி, ஸ்கார்பியன் அரசன் கி.பி 3150 வருடத்திற்கு முன்பு ஒயினை தயாரித்தனர். இதில் ஏகப்பட்ட மூலிகை குணங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். அப்படியே இதன் சுவையிலும் நன்மையாலும் உலகம் முழுவதும் பரவியது. இதை குடித்தாலே மனநிலை ரிலாக்ஸ் அடையும். இதய செயல்பாட்டை மேம்படுத்தும் என்று கண்டறியப்பட்டது.
ரெட், வொயிட், ரோஸ், ஸ்பார்க்கிளிங் மற்றும் ஃபோர்டிபைடு என ஐந்து வகை ஒயின் உள்ளது. அதில் ரெட் ஒயின் மிகவும் பிரபலமானது. சிவப்பு திராச்சை பழங்களில் இருந்தே ரெட் ஒயின் தயாரிக்கப்படுகிறது. அதில் இருக்கும் தோள்கள் மற்றும் விதைகளை பயன்படுத்தி செய்வதால் இது சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
ரெட் ஒயினில் flavonoid, resveratrol, tannin போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் collagen மற்றும் elastic fibers-ஐ பாதுகாத்து சருமங்களை இளமையாக காட்டும். இதிலுள்ள ப்ளோனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களில் இருந்து நாம் உடலை பாதுகாக்கிறது. குறிப்பாக குடல் புற்று நோய் வராமல் காக்கிறது.
ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
சிவப்பு திராச்சை தோலில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் இதய நோய் பாதிப்பு குறைவான அளவிலேயே இருக்கும். ரெட் ஒயின் குடிக்காதவர்களை விட ஒரு நாளுக்கு ஒருமுறையாவது ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு பத்து பவுன் கொழுப்பு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஒயினில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது. அதனால் எடை கொடுவதற்க்கான வாய்ப்பு குறைவே.