Mnadu News

ஒருபுறம் ஆப்ரேஷன் மின்னல்; மறுபுறம் ஐஜி வீட்டில் கொள்ளை: மர்மத்தை விளக்க இபிஎஸ் கோரிக்கை.

தமிழகத்தில் ரௌடிகள் மற்றும் கொள்ளையர்களை கைது செய்யும் ஆப்ரேஷன் மின்னல் மூலம் 72 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 905 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளார் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்ரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 905 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2 ஆயிரத்து 390 ரௌடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும் போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. பூர்வீக வீட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பணியில் உள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டிற்குள் ஆப்ரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரௌடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.என்ற அவர் ,இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends