Mnadu News

ஒரு பாலின திருமண விவகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.

ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது,வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்கு மிகவும் முக்கியமானது.எனெனில் இது, மாநில அரசுகளின் சட்ட வரம்பில் வருகிறது.எனவே, இந்த வழக்குகளில் மாநில அரசுகளை பங்கேற்க செய்ய வேண்டும்.அதனால், மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்படும் வரை இந்த வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டார்.ஆனால், இதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Share this post with your friends