எழும்பூர் ரயில் நிலையம் 734 கோடியே 91 லட்சம் ரூபாயில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமை தாயகம் அமைப்பின் செயலர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றே மரங்கள் வெட்டப்படுகின்றன, நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்கு வெட்டப்படும் ஒவ்வாரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நட தெற்கு ரயில்வேக்கு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மரக்கன்று நடுவதிலும், இடமாற்றுவதிலும் குறையிருப்பின் நீதிமன்றத்தை நாட பசுமை தாயக அமைப்புக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More