ஒரு படத்துக்கு முக்கியம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்றால் அந்த படத்தின் வெற்றிக்கு மூலகாரணமே அது தான், ஆம் தமிழ் சினிமாவில் ஒரே இசை அமைப்பாளரோடு பல படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம் :

வெற்றி மாறன் :
“பொல்லாதவன்” படத்தில் துவங்கிய இவர்களின் பயணம் சுமார் 15 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. ஆம், ஆடுகளம், விசாரணை, அசுரன், என இவர்களின் கூட்டணியில் வந்த படங்களின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. இப்போது இவர்கள் கூட்டணியில் வாடிவாசல் உருவாகி வருகிறது. இதிலும் இந்த கூட்டணியே தொடர்கிறது.

ஷங்கர்:
“ஜென்டில்மேன்” படத்தின் மூலம் இணைந்த இந்த பிரம்மாண்ட கூட்டணி இன்று வரை அசைக்க முடியாமல் நல்ல நட்போடு தொடர்ந்து வருகிறது. காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, எந்திரன் 2.0 என இவர்களின் கூட்டணி பல எவர்கிரீன் பாடல்களை கொடுத்துள்ளது. குறிப்பாக, இந்தியன், முதல்வன், சிவாஜி படங்களின் பின்னணி இசை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மணி ரத்தினம்:
“ரோஜா” படத்தில் உருவான இந்த மெகா கூட்டணி சுமார் 30 ஆண்டுகளாக தற்போது வரை அதே உயிர்ப்போடு இயங்கி வருகிறது. பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தம் இட்டால், இராவணன், கடல், காற்று வெளியிடை, ஓகே கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் என இவர்களின் கூட்டணி இது நாள் வரையில் தவிர்க்க முடியாத பல ஹிட் மற்றும் காலம் கடந்து நிற்கும் எவர் கிரீன் பாடல்களை தந்து உள்ளது. இது நாள் வரையில் உடையாமல் 30 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறது. இதே கூட்டணி தற்போது கமல் படத்தில் பணியாற்றி வருகிறது.
