Mnadu News

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்.

மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாள்கள் நடத்துகின்றன. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13 ஆயிரத்து 500 விவசாயிகளும், ஆயிரத்து 500 வேளாண் புத் தொழில் முனைவோரும் நிகழ்ச்சியில் கலந்து கொணடுள்ளனர். காணொலி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, 16 ஆயிரம் கோடி ரூபாயை நேரடி பணப் பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமர் விடுவித்தார்.
அதையடுத்து ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

Share this post with your friends