Mnadu News

ஒரே நாளில் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே 25 மீனவர்களும், மன்னார் அருகே 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 35 மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு தரப்பில் மத்திய அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் சூழலில், மேலும், 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தை சேர்ந்த 2 விசைப்படகு, 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More