ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதனை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.கடைசியாக கடந்த ஏப்.,27 ல் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்வி: ஒரே பாலின தம்பதிகளின் திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல், காப்பீடு, வங்கிச்சேவை உள்ளிட்ட சமூக பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமான என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.,இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தர், ஒரே பாலின தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக பலன்கள் குறித்து ஆராய கேபினட் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும். வங்கிச்சேவை, காப்பீடு உள்ளிட்ட அவர்களின் தேவை குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ...
Read More