கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட கே சி சி நகர், NGO காலனி உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதியில் உள்ள ராஜ கால்வாய் முழுமையாக நிரம்பி வழிந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் முழுமையாக மழை நீர் வடிந்த பிறகு உண்மை நிலை தெரிய வரும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More