Mnadu News

ஓடிடியில் பிளாக் பஸ்டர் அடித்த “வீரன்”! கொண்டாடிய படக்குழு!

கதை :

வீரன் என்கிற சூப்பர் ஹீரோ :

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியை லீட் ரோலில் வைத்து எடுத்துள்ள படம் “வீரன்”. சூப்பர் ஹீரோ என்றாலே ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்க முடியும் என்பதை வேரறுக்கும் வகையில், பல சூப்பர் ஹீரோ படங்கள் வரிசை கட்டி வருகின்றன.

கதை என்ன ?

கதையின்படி, பள்ளிப்பருவத்தில் இடி தாக்கி பாதிப்புக்கு உள்ளாகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். சிகிச்சைக்கு பிறகு தனக்குள் சூப்பர் ஹீரோ சக்தி உருவாகி இருப்பதை உணர்கிறார்.

சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அவருடைய ஊர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்தான ஒரு திட்டத்தை அங்கு தொடங்க தனியார் நிறுவன உரிமையாளரான வினய் முயற்சி செய்கிறார். தனியார் நிறுவனத்தின் திட்டம் மூலம் கிராமத்துக்கு நேரிடப்போகும் பேராபத்தை அறியும் ஹிப் ஹாப் ஆதி தனது சூப்பர் பவர் மூலம் தடுத்து மக்களை காப்பாற்ற போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் செகண்ட் ஹாஃப்.

கதையின் மாந்தர்கள்:

ஹிப்ஹாப் ஆதி, வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்து இருந்தார். ஜூன் 2 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சொல்லிக்கொள்ளும் படியான வசூலை வாரிக் குவித்தது.

ஓடிடியில் வீரன் :

ஜூன் 30 அன்று “அமேசான் பிரைம் இந்தியா” ஓடிடி தளத்தில் வெளியானது முதல், வீரன் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் திரைப்படம் என்றளவில் ‘வீரன்’ அங்கீகாரம் பெற்று உள்ளது. இதனையடுத்து, “டிஜிட்டல் பிளாக்பஸ்டர்” என படக்குழு கொண்டாடி வருகின்றனர்.

Share this post with your friends