Mnadu News

ஓடிடி தளங்களை தொலைத்தொடர்பு சேவைக்குள் கொண்டு வரும் புதிய வரைவு மசோதா அறிமுகம்!

புதுடெல்லி, மத்திய தொலைத்தொடர்புத் துறை, புதிய வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை மாற்ற அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களுக்கு ஏற்ப, தொலைத்தொடர்புத் துறைக்கான புதிய சட்டக் கட்டமைப்பு இந்தியாவுக்குத் தேவை என்று மத்திய அரசு கருதுகிறது. ‘இந்திய தந்தி சட்டம், 1885’, ‘வயர்லெஸ் தந்தி சட்டம், 1933’ மற்றும் ‘தந்தி கம்பி (சட்டவிரோத உடைமை) சட்டம், 1950’ ஆகியவற்றை ஒரு புதிய மசோதா மூலம் ஒருங்கிணைக்க அரசாங்கம் விரும்புகிறது. அதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், புதிதாக முன்மொழியப்பட்ட மசோதா ‘இந்திய தொலைத் தொடர்பு மசோதா, 2022’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 118.92 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையாக உள்ளது. இதில் மொபைல் போன் இணைப்புகள் 116.83 கோடி மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்புகள் 2.09 கோடி. நாட்டின் மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 90.23 சதவீதம்.


இந்திய தொலைத் தொடர்பு மசோதா, 2022′ வரைவைத் தயாரிக்கும் போது, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தொடர்புடைய சட்டங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் தரவு பாதுகாப்பு ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. ஆகவே புதிய வரைவு மசோதாவின் கீழ், ஓடிடி இயங்குதளங்கள் “தொலைத்தொடர்பு சேவைகளாக” கருதப்படும். மேலும், ஒளிபரப்பு சேவைகள், மின்னணு அஞ்சல், குரல் அஞ்சல், குரல், வீடியோ மற்றும் தரவு தொடர்பு சேவைகள் போன்றவையும், ஆடியோடெக்ஸ் சேவைகள், வீடியோடெக்ஸ் சேவைகள், நிலையான மற்றும் மொபைல் சேவைகள், இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் போன்றவையும், செயற்கைக்கோள் மற்றும்இணைய அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகள், விமானம் மற்றும் கடல் இணைப்பு சேவைகள், தனிநபர் தொடர்பு சேவைகள் புதிய வரைவு மசோதாவின் கீழ் ஆகியவையும் “தொலைத்தொடர்பு சேவைகளாக” கருதப்படும். இந்த புதிய வரைவு மசோதாவின் குறித்த பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 20 கடைசி நாள்.கருத்துகளை naveen.kumar71@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Share this post with your friends