Mnadu News

கங்கையில் புனித நீராட சென்றபோது கோர விபத்து; 15 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் டிரெய்லரில் இருந்த 7 குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

காதர்கஞ்ச் பகுதியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமான மக்களும் திரண்டனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறியுள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More