ஐ பேக் நிறுவனரும், அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர், மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஹாரின் காந்தி ஆஸ்ரமத்தில் இருந்து, தனது 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர். யாத்திரையை நேற்று தொடங்கினார்.பின்னர் பேசிய அவர், கடந்த 30 – 40 வருடங்களாக பீகார் கல்வி மற்றும் சுகாதாரத்தில் வளர்ந்துள்ளதாக கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இங்கு எதுவும் மாறிவிடவில்லை. கடந்த 1990 ஆம் ஆண்டு பீகார் ஏழ்மையான மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. இப்போது, 2022 லும் அப்படியே தான் இருக்கிறது. மக்கள் வேலைக்காக இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றனர் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More