கடம்பூரில் 9 வாக்குச்சாவடிகளில் பேரூராட்சி தேர்தல் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர் புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை 9 வாக்குசாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளும் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்வதை முழுவதும் வீடியோவாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது