கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சேமகோட்டை ஊராட்சி ஒன்றியம். இந்த கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக பல்வேறு இணையதளங்களில் மணிவண்ணன் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் மணிவண்ணன் தங்கள் கிராமத்தை சேர்ந்த குடும்பப் பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு சலுகைகள் பெற்றுத் தருவதாகவும் கூறி தவறான உறவில் இருந்துவிட்டு, அதனை வீடியோவாக எடுத்ததாக கூறப்பட்டு உள்ளது.

இந்த வீடியோக்களை அவரே இணையதளத்தில் கசியவிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுவை பெற்றுக்கொண்ட கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் நிச்சயம் சரியான நடவடிக்கை எடுப்பதாகவும் மேற்படி விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
