Mnadu News

கடும் குளிர் எதிரொலி – டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் அளவு அதிகரித்து மக்களை பாடாய் படுத்துகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லிவாசிகள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காரணமாக 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 12-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends