Mnadu News

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு சீல்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதையடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடையநல்லூர் பள்ளிக்கூட தென்வடல் தெரு பகுதியில் வாடகை கட்டடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ,தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, கடையநல்லூர் வட்டாட்சியர் சண்முகம், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this post with your friends