Mnadu News

கட்டணம் இல்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம்; தமிழக அரசு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண பொருட்கள் கட்டணமின்றி இலவசமாக அனுப்பப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends