Mnadu News

கட்டா குஸ்தி ரீலீஸ் தேதி அறிவிப்பு!

செல்லா ஐய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி, ரவி தேஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விவேக் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு மிகவும் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். எப் ஐ ஆர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த வருடத்தில் விஷ்ணு விஷாலுக்கு இது இரண்டாவது படமாகும். ஒவ்வொரு படத்துக்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர் இந்த படத்தில் தமது சோதனை முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெளியான போஸ்டர் கவனம் ஈர்த்த நிலையில், இப்படம் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends