தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூலைவாய்கள் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக அங்குள்ள ஒருவரிடம் கந்து வட்டிக்கு ரூபாய் 10 லட்சம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அதில் ஒரு பகுதியை அவர் திருப்பி செலுத்தியும் மேலும் 25 லட்ச ரூபாய் பணத்தை தருமாறு கேட்டு வட்டிக்கு பணம் கொடுத்தவர் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனா உளைச்சலுக்கு ஆளான மாரியப்பன் அவரது மனைவி பத்தினி, மகன் சந்துரு, மகள் அம்சவேணி ஆகிய நான்கு பேரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More