கனடாவில் துப்பாக்கி வன்முறையைக் குறைப்பதற்காக அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனை, கொள்முதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. துப்பாக்கி தடை குறித்து பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால், நம் சமூகத்திலிருந்து இந்த கொடிய ஆயுதங்களை அகற்ற அவசர நடவடிக்கை எடுப்பது எங்கள் கடமை. துப்பாக்கியால் ஏற்படும் வன்முறையை நாட்டில் அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். கனடா அரசின் இந்த புதிய உத்தரவுப்படி, கனடா மக்கள் அந்த நாட்டிற்குள் இனிமேல் கைத் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது, அதோடு. புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வரவோ முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More