உலக நாயகன் கமல் கொடுத்த மெகா பிளாக் பஸ்டர் ஹிட் தான் “விக்ரம்”. சென்ற வருடம் வெளியான இப்படம் திரைதுறையையே வசூலில் வாய் அடைக்க செய்தது. ஆம், யாரெல்லாம் கமல் கமர்சியல் வெற்றி பெரிதாக தர முடியாது என சொன்னார்களோ அவர்களுக்கு இது ஒரு சாட்டையடி. விக்ரம். தந்த வெற்றி கமலை இன்னும் வேகமாக ஓட வேண்டும் என தூண்டி உள்ளது என்பன போல தான் உள்ளது அவரின் அடுத்தடுத்த பட வெளியீடுகள்.
இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே , KH233, KH234 போன்ற படங்கள் அடுத்தடுத்து கமலின் படங்கள் லைன் அப்பில் உள்ளதால் அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இவை அனைத்துமே அடுத்த வருட ரீலீஸ் என்பதால் ஆண்டவரின் ரசிகர்களுக்கு செம தீனி எனும் சொல்லும் வகையில் உள்ளது இவரின் லைன் அப்புகள்.
முன்னமே இவர்களின் கூட்டணியில் உருவாகும் படம் விவசாயத்தை மையப்படுத்தி கதை அமைந்துள்ளது என கூறப்படும் நிலையில், தற்போது இது விவசாயத்துக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த நெல் ஜெயராமன் வாழ்வை தான் ஒரு பயோபிக்காக இன் எடுக்க உள்ளார்கள் என ஒரு தகவல் வெளியானது.
ஆனால், ஹெச் வினோத் இடம் இன்னொரு கதையும் உள்ளதாம் அது சர்வதேச ஊடக அரசியலை, பொருளாதாரத்தை பேசும் அளவுக்கு ஒரு கதை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் ஒன்றை உலக நாயகன் தேர்வு செய்து இப்பட ஷூட்டிங்கை இந்த வருடத்துக்குள் முடித்து விட வேண்டும் என கமல் பிளான் செய்துள்ளார் என கூறப்படுகிறது. KH 233 டிஜிட்டல் உரிமம் ₹125 கோடிகளுக்கு தற்போதே பிரபல ஓ டி டி நிறுவனத்துக்கு விற்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.