அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளித்தது. பின்னர் அமைச்சரவையில் இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.அதையடுத்து இந்த ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு , வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More