கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.அதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.அதோடு., பால் மானியம் லிட்டருக்கு 5-ரூபாயிலிருந்து 7ரூபாய் ஆக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More