Mnadu News

கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு போட்டி: பா.ஜ.,விலும் சிக்கல்?.

பா.ஜ.க, தரப்பில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு யாருக்கு வழங்கலாம் என பா.ஜ.க, மேலிடம் யோசிக்க துவங்கி உள்ளது. எதிர்கட்சி தலைவர் பொறுப்பு போட்டியில் பொம்மை, அசோகா, பசன்கவுடாபாட்டில்,சுனில்குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. பசன்கவுடாபாட்டில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர், அதோடு,அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலும் பேச்சிலும் வல்லவர். கர்நாடகாவில் அதிகம் உள்ள இந்த சமுதாய மக்களை திருப்திப்படுத்த இவருக்கு வழங்கப்படலாம்.அதே சமயம்,சுனில்குமார், இவர் ஆர்எஸ்எஸ், இயக்கத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். கடலோர மாவட்டங்களில் தனி செல்வாக்கு உண்டு. அசோகா என்பவரை பொறுத்தவரை , ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர். பா.ஜ.க, ஆட்சி வந்தால் எப்போதும் அமைச்சராவார். 7 முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர். துண முதல் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அநுபவம் உள்ள இவருக்கும் எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this post with your friends