சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் புஷ்பலதா. இவரது கணவர் சோமேஷ். நேற்று முன்தினம் இரவு இரண்டு பேரும் சிந்தாமணிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும்போது, மைலாபுரா சாலையில் வந்தபோது, இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தம்ப்தியை வழி மறித்து உள்ளனர்.
மேலும், தப்பி செல்ல முயன்ற தம்பதியை அந்த மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள், புஷ்பலதாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் தப்பித்து உள்ளனர்.
இது குறித்து தம்பதி கூச்சல் இடவே அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், தம்பதி இது குறித்து சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், சுமார் ₹3 லட்சம் மதிப்புடைய நகை என்றும், மர்ம நபர்களுக்கு சுமார் 50 வயது இருக்கும் என கூறி உள்ளார். இது குறித்து சிந்தாமணி போலீஸார் விசாரணையை துவக்கி உள்ளனர்.