Mnadu News

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், பா.ஜ.க, சார்பில் இது வரை இரண்டு கட்டமாக 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று 10 பேர் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் வெளியிடடுள்ளது. மீதமுள்ள 2 வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்தி வைத்துள்ளது.

Share this post with your friends