Mnadu News

கலாஷேத்ரா விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பான சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடைய வில்லை எனவும், நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கமளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.அதோடு,மாநில மகளிர் ஆணைய அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share this post with your friends