புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.அதைப் படித்த நீதிபதிகள்,வட்டாட்சியர் கல்குவாரியைச் சுற்றி கோவில், குளங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் மாவட்ட ஆட்சியர்; அறிக்கையில் ஏன் அதை குறிப்பிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர். அதோடு, இரண்டு அறிக்கையிலும் தேதியில்லாமல் கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்ததைப் பார்த்த நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். படித்த அதிகாரி இவ்வாறு நடந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பினர்.அத்துடன்,மாவட்ட ஆட்சியர்; தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்த நீதிபதிகள், வரும் 20-ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர்; நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More