சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக கல்வான் நதி பாய்கிறது. ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பொழுதுபோக்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கல்வான் பள்ளத்தாக்கில் திடல் சரிசெய்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிடப்பட்டு வருகிறது.அதோடு, பங்காங் ஏரி அருகே குதிரையில் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். இதோடு மட்டுமல்லாமல் லடாக்கில் ராணுவ வீரர்களுக்கிடையே பனிச்சறுக்கு ஹாக்கி போட்டியும் நடத்தப்படுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More