2019 ஆண்டுத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அறிவாலயத்தில் முக ஸ்டாலின் தலைமையில் வெளியிட்டனர். முக்கிய செய்திகளாக திமுக தலைவர் ஸ்டாலினால் வாசிக்கப்பட்டது.
அதில் மாணவர்களுக்கான கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், மாணவர்கள் இரயிலில் பயணம் செய்ய இலவச பயண அட்டையை வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் மத்திய பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கல்விக்கும் மாணவருக்கும் உரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டிருப்பது அனைவரின் பாரட்டையும் பெற்று வருகிறது.