Mnadu News

கல்வியும், மருத்துவமும் அரசின் இரு கண்கள்: முதல் அமைச்சர் பேச்சு.

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘ சுகாதார மாநாடு 2022’யை முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.இதையடுத்து, முதல் அமைச்சர் ஸ்டாலின் பேசியவதாவது, ஏழை மக்களுக்காகவே இல்லம் தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட உள்ளது. தமிழகத்தின் உள்ள மருத்துவ திட்டங்களை பார்த்து பிற மாநிலங்களும் அவற்றை செயல்படுத்துகின்றன. சுகாதாரத்துறையில் மிக உயர்ந்த குறியீகளை எட்ட மாநில அரசு உழைத்து வருகிறது. மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோள். நோய்கள் புதிய அவதாரம் எடுப்பதால் நவீன சிகிச்சை முறைகள் வேண்டும்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை, மருத்துவமனை தேவைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏழை மக்களின் நோயை துவக்க நிலையிலையே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை அரசின் நோக்கம். கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இரு கண்களஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மருத்துவத்தறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மருத்துவ சேவையை மேலும் செம்மைப்படுத்துவதன் முதல் படியே இந்த கூட்டம். அரசு மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசி உள்ளார்.

Share this post with your friends