மத்தூர் அருகே இரு வேறு இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து ஆண் பெண் என இருவர் கைது..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கொடமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் மகேந்திரன் என்பவர் மாதம்பட்டி பிரிவு சாலையில் முருகேசன் என்பவரது மாந்தோப்பில் கீற்று கொட்டகை அமைத்து அங்கு கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்தூர் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மகேந்திரன் மது விற்பனை செய்ததை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஜீடிகுப்பம் கிராமத்தில் ராஜா என்பவரது மனைவி மல்லிகா என்பவர் அவரது வீட்டில் மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்தூர் போலீசார் மல்லிகா வீட்டில் சோதனை செய்ததில் மல்லிகா மது விற்பனை செய்ததை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.